தஞ்சை ஏப்ரல் 28: தஞ்சையில் மக்கள் மத்தியில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உட்பட கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. நாள் ஒன்றுக்கு பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை நெருங்கியுள்ளது,

குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், கர்நாடகா, குஜராத், அரியானா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது. அங்கு கடந்த 2 வாரங்களை ஒப்பிடும்போது 15 சதவீதத்துக்கும் அதிகமாக பாதிப்பு உயர்ந்து உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் நாளொன்றுக்கு சுமார் 300 பேர் வீதம் கடந்த 5 நாட்களில் ஆயிரத்து 1500க்கும் மேற்பட்டோருக்கு பெறுந்தோற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவின் பேரில் தஞ்சை பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் மேற்பார்வையில் நேற்று தஞ்சையில் 8 இதை போல் தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பழைய தற்காலிக பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் உள்பட 8 இடங்களில் இடங்களில் எமதர்மன் பாசக்கயிறு வீசுவதை போல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது நாட்டுப்புற ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் மத்தியில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அந்த வகையில் தஞ்சை கொடிமரத்து மூலை பகுதியில் நடத்தப்பட்ட திரைப்பட பின்னணி பாடகர் ஒரத்தநாடு கோபு குழுவினர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், கண்காணிப்பாளர் கிளமென்ட், நகர்நல பிரிவு உதவியாளர் மாதவன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.