தஞ்சாவூர் டிச 05: தஞ்சை மாவட்ட காவல் அலுவலகத்தில் மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன் நேற்று வருடாந்திர ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்குகேடயம் வழங்கினார்.
தஞ்சை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வருகை புரிந்தார். தொடர்ந்து வருடாந்திர ஆய்வுகளை மேற்கொண்டார். பின்னர் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தன்னலம் பாராமல் உதவிகள் செய்த தன்னார்வலர்களின் சேவையை ஊக்குவிக்கும் விதமாக பொன்னாடை மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.
ஆதரவற்ற மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு உணவு பொருட்கள், பழங்கள் மற்றும் உடைகள் போன்றவற்றை வழங்கி அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட அறிவுறுத்தினார். சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி அவர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார்.
தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிப்பிரிவு போலீசாருக்கு சுழற்கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இதில் தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி., ரவளிப்பிரியா மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/