தஞ்சாவூர்செப் 22 தஞ்சையிலிருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு கோழி தீவனத்திற்காக கடத்திய 15 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த் துறையினர் கைப்பற்றினர்.

தஞ்சாவூர் அருகே மாதா கோட்டை புறவழிச்சாலையில் உள்ள கொட்டகையில் இருந்து வெளியில் மாவட்டத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய் துறையினருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில், தஞ்சாவூர் தாசில்தார் மணிகண்டன் வட்ட வழங்கல் அலுவலர் சுவராஜ் மண்டல துணை தாசில்தார் செந்தில் உள்ளிட்டோரும் உணவு பொருள் வழங்கல் துறையினரும் சென்று ஆய்வு செய்தனர். அப்போது மாதாகோட்டை புறவழிச்சாலையில் உள்ள கொட்டகையில் ஒரு லாரி மூணு மணி வேன்களில் ஏற்றுக் கொண்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை அலுவலர்கள் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் நீண்ட நாட்களாக தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட ரேஷன் அரிசி அரவை ஆலைகள் துணையாக அழைத்து மாதாகோட்டை புறவழிச்சாலையில் உள்ள திறந்த வெளியில் அமைக்கப்பட்டுள்ள கொட்டகைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று மூட்டைகளில் நிரப்பி நாமக்கல் மாவட்டத்திற்கு கோழி தீவனத்துக்காக அனுப்பப்படுவது விசாரணையில் தெரியவந்தது. லாரிகளிலும் வேன்களிலும் சுமார் 300 முட்டைகள் என 15 டன் ரேஷன் அரிசி இருப்பதும் தெரியவந்தது.

இவற்றை உணவு பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வருவாய்த்துறையினர் ஒப்படைத்தனர் மேலும் லாரி, 3 வேணும், பறிமுதல் செய்யப்பட்டது இது தொடர்பாக அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த 8 கூலித் தொழிலாளர்கள் இடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/