தஞ்சை எப்: 12 ,தங்கள் உயிரை பணையம் வைத்து இரவு பகல் பாராமல் பாடுபட்டு வரும் மருத்துவர்கள் செவிலியர்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முழு பாதுகாப்பு வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.

தஞ்சை மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணி அளவில் மருத்துவமனையில் விபத்து சிகிச்சைக்காக 5 நபர்கள் அனுமதிக்கப்பட்டனர் அவர்களில் ஒருவருக்கு காயங்கள் அதிகமாக உள்ளது கூட வந்த நபர்கள் அங்கு பணியிலிருந்த மருத்துவர் ஒருவருடன் வாக்குவாதம் செய்து அவரை தாக்க முயற்சித்ததாகவும் மருத்துவருக்கு காயம் ஏதும் இல்லை மருத்துவமனை கண்காணிப்பாளர் மூலம் இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

உடனடியாக தஞ்சாவூர் ஆர்டிஓ காவல்துறை துணை கண்காணிப்பாளர் அங்கு சென்று விசாரணை நடத்தி நானும் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விசாரணை செய்து சிசிடிவி காட்சி அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மருத்துவர்கள் செவிலியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து இரவு பகல் பாராமல் பாடுபட்டு வருகின்றனர், அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முழு பாதுகாப்பு வழங்கப்படும், யாரேனும் மருத்துவம் களப்பணியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்த முயற்சித்தாலும் மரியாதைக்குறைவாக நடத்தவோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவர், தேவைப்பட்டால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.

க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை