தஞ்சை மார்ச் 1 தஞ்சை ஒரத்தநாட்டிலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு காவித்துண்டு போர்த்துகின்றேன் என்ற பெயரில் யாரோ மதவாத விஷமிகள் சிவப்பு நிற துண்டினை போர்த்தியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு எச் ராஜா போன்றவர்களின் மதவெறி பேச்சினால், பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகளை இரவு நேரங்களில் யாரும் இல்லாத நேரத்தில், மதவாத விஷமிகள் சேதப்படுத்தி வந்தனர், திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவு இயங்கள், பொதுவுடைமை கட்சிகளின் கண்டனத்திற்கு பிறகு, அரசாங்கம் கொஞ்சம் கடுமை காட்டியதன் எதிரொலியாக, இந்த சட்ட புறம்பான வேலைகள் நின்றன.

இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், மற்றும் மார்ச் 1 திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை மனதில் கொண்டு இந்த விஷமிகள், தஞ்சை மாவட்டத்தில் பெரியார் அவர்களின் அரணாக விளங்கும் ஒரத்தநாட்டில் இது போன்ற சட்ட விரோத செயலை செய்திருப்பது, கலவரத்தை உண்டாக்கி பொது அமைதியை குழைக்கவே என்று பொது மக்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து ‍தெரிவிப்பதோடு, இதனை வன்மையாக கண்டிக்கின்றனர்.

செய்தி ம.செந்தில்குமார்
தஞ்சை.