தஞ்சாவூர் அக்.13-பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக் கழகத்திற்கு புதிய பதிவாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தஞ்சை அருகே உள்ள வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதல் பெண் பதிவாளராக பேராசிரியர் பி.கே. ஸ்ரீவித்யா பொறுப்பேற்றுக்கொண்டார்.

பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். வேலுச்சாமி பணி ஆணையை வழங்கினார் பேராசிரியர் பி.கே. ஸ்ரீவித்யா பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியாக இருந்தபோது 1997ஆம் ஆண்டு இயந்திரவியல் துறையில் பணியில் சேர்ந்தார்.

பின்னர் இயந்திரவியல் துறை தலைவராகவும் மாணவர் சேர்க்கை இயக்குனராகவும் பின்னர் கல்விப்புல முதன்மையாளராக பணியாற்றி வந்தார் இயக்குனர்கள் முதன்மை யர்கள் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பதிவாளராக பொறுப்பேற்ற பேராசிரியர் பி. கே. ஸ்ரீவித்யாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/