தஞ்சாவூர் செப்.14 -சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

சமூக நீதிக்காக பாடுபடுவார்கள் சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது கடந்த 1985ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூபாய் ஒரு லட்சம் மற்றும் ஒரு சவரன் தங்கப் பதக்கமும் தகுதி சான்றும் வழங்கப்படுகிறது.

விருதாளர் தமிழ்நாடு முதல்வரால் தேர்வு செய்யப்படுவார். 2023 ஆம் ஆண்டிற்காண தமிழக அரசும் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளர் தெரிந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

எனவே சமூக நீதிக்காகப் பாடுபட்ட பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதியுடையவர்கள் தங்களது விண்ணப்பத்தை மாவட்ட கலெக்டர் வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தங்களது விண்ணப்பம் சுய விவரம் முழு முகவரி, தொலைபேசி எண், மற்றும் சமூக நீதிக்காகப் பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தஞ்சை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தெரிவித்துள்ளார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/