தஞ்சை பிப். 10, தஞ்சையில் முன்னாள் தீயணைப்பு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள எடையூர் சங்கேந்தி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் வயது 61 இவர் திருச்சி புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் பணியாற்றினார்/
இவர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது, அதன் அடிப்படையில் ஓய்வு பெறுவதற்கு முன்பு கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 31ம் தேதி தஞ்சையில் பணியாற்றியபோது பணியிடை நீக்கம் செய்யப்பட்டார், இதன் தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது, இந்த நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக சிந்தாமணி குடியிருப்பில் உள்ள ரவிச்சந்திரனின் வீட்டில் நேற்று பிற்பகல் முதல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் சூப்பிரண்ட் மணிகண்டன் தலைமையில் போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டனர், இதேபோல் தஞ்சை அம்மா குளத்திலுள்ள ரவிச்சந்திரனின் மற்றொரு வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.