தஞ்சாவூர் ஆக 21-தூய தமிழ் சொற்களால் கவிதை புனையும் படைப்பாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடரசு நற்றமிழர் பாவலர் விருது அறிவித்துள்ளது.

மரபுக்கவிதை புதுக்கவிதை பிற மொழி கலப்பில்லாத நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தினால் அச்சொற்களின் வீச்சு மக்களிடம் எதிர்காலத் தலைமுறையினரிடம் எளிதாக சென்றடையும். எனவே பிற மொழி கலப்பில்லாத தூய தமிழ் சொற்களையும் காலத்திற்கு ஏற்ற புதிய தமிழ் கலைச் சொற்களையும் பயன்படுத்தி கவிதைப் படைப்புகளை உருவாக்குவதில் மொழிப்பற்றும், படைப்பாற்றலும், ஊக்கம் அளித்திடுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இளம் தலைமுறையினரை மொழி கலப்பில்லாத படைப்பாற்றலை நோக்கி ஈர்க்கவும் தங்களது கவிதைப் படைப்புகளில் மரபுக்கவிதை புதுக்கவிதை பிற மொழி கலப்பின்றி தூய தமிழ் சொற்களையும் புதிய தமிழ் கலைச் சொற்களையும் பயன்படுத்தும் பாவலர்கள் இதுவரை தெரிந்தெடுத்து தமிழ் அகராதியியல் நாள் விழாவின்போது தங்கப் பதக்கம் மற்றும் “நற்றமிழ்ப் பாவலர் விருது” மற்றும் விருது தொகை ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அதற்கான விண்ணப்பப் படிவத்தை சொற்குவை காம் என்ற வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிறைவு செய்து. Paavalarvirudu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

அஞ்சல் வழியாக அனுப்ப இயக்குனர் செந்தமிழ் சொற்பிறப்பியல்முதலில் திட்ட இயக்கம் நகர் விரிவாக்க அலுவலக வளாகம் முதல் தளம் எண் 75 சாந்தோம் நெடுஞ்சாலை எம் ஆர் சி நகர் சென்னை.600028.என்ற முகவரிக்கு வரும் 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் தங்கள் படைப்புகளில் தூய தமிழ் மட்டுமே பயன்படுத்தி பிறகு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கடைசியாக வெளிவந்த இரண்டு கவிதை நூல்களை இயக்கத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும் மின்னஞ்சல் வாயிலாக வெளிப்படுகிறது புலனம் வழியாகவோ அனுப்பி வைக்கப்படும் நூல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என சென்னை செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் அறிவித்துள்ளது.

செய்தி க.சசிகுமார் நிருபர்
https://thanjai.today/