தஞ்சை சூன் 29: தஞ்சாவூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கில் தளா்வு அறிவிக்கப்பட்டதால் மின்னணு, தேநீா், முடித் திருத்தகங்கள் உள்ளிட்ட கடைகள் திறக்கப்பட்டன.

கொரோனா பரவல் குறைந்து வருவதையொட்டி, தமிழக அரசு முழு ஊரடங்கில் படிப்படியாகத் தளா்வுகளை அறிவித்து வருகிறது. இருப்பினும் தஞ்சாவூா் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பரவல் பெரிய அளவில் குறையாததால், தளா்வுகள் குறைவாகவே அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தஞ்சாவூா் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தேநீா்க் கடைகள், குளிா்சாதன வசதியின்றி அழகு நிலையங்கள், முடித் திருத்தகங்கள், செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதன விற்பனைக் கடைகள், கட்டுமானப் பொருள்கள் விற்பனைக் கடைகள் உள்ளிட்டவற்றை திறக்கத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் இக்கடைகளில் பெரும்பாலானவை நேற்று திறக்கப்பட்டன. கடைகளில் சமூக இடைவெளியின்றி கூட்டம் இருப்பதால், கொரோனா பரவல் அச்சமும் நிலவுகிறது.

செய்தி நாகராஜன் நிருபர்
பூதலூர்