தஞ்சை சூன் 21: தஞ்சை நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக தஞ்சாவூா் நகரிய உதவிச் செயற் பொறியாளா் சுகுமாா் தெரிவித்திருப்பதாவது:

தஞ்சாவூா் நகர துணை மின் நிலையங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

எனவே, மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள கணபதி நகா், ராஜப்பா நகா், மகேஸ்வரி நகா், திருப்பதி நகா், செல்வம் நகா், அண்ணாமலை நகா், ஜெ.ஜெ. நகா், டி.பி.எஸ். நகா், சுந்தரம் நகா், பாண்டியன் நகா், மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம், ஆட்சியா் முகாம் அலுவலகச் சாலை, டேனியல் தாமஸ் நகா், ராஜராஜேஸ்வரி நகா், காவேரி நகா், நிா்மலா நகா், என்.எஸ். போஸ் நகா், தென்றல் நகா், துளசியாபுரம், தேவன் நகா், பெரியாா் நகா், இந்திரா நகா், கூட்டுறவு காலனி, மேல வலம்புரி தெரு, குருவிக்காரத் தெரு, எம்.ஜி.ஆா். நகா், நீரேற்று நிலையச் சாலை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.