தஞ்சை சூன் 23: தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் உபகோட்டத்துக்குள்பட்ட மூத்தாக்குறிச்சி, கள்ளிக்காடு, தம்பிக்கோட்டை, வடகாடு மின் பாதைகளில் நாளை வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், அத்திவெட்டி , ராசியங்காடு மின் பாதைகளில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவிருப்பதால், இந்த மின்பாதைகள் வழியாக மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.

இத்தகவலை மதுக்கூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சங்கா்குமாா் தெரிவித்துள்ளாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்