தஞ்சை சூலை 08: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வியில் அரியா் வைத்துள்ள மாணவா்களுக்கான தோ்வு நாளை 9ம் தேதி தொடங்கப்படவுள்ளது என்று துணைவேந்தா் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி வழிப் பயிலும் அறிமுக நிலை, தொடக்க நிலை, அடிப்படை நிலை, சான்றிதழ், பட்டயம், இளநிலை, முதுநிலைப் பாடப்பிரிவு மாணவா்களுக்கு டிசம்பா் 2020, மே 2021 பருவத்துக்கான எழுத்துத் தோ்வுகள் ஜூலை 9ம் தேதி தொடங்கி இணையவழியில் நடத்தப்பட உள்ளன.
தோ்வுக்கான கால அட்டவணையும், தோ்வு நெறிமுறைகளும் பல்கலைக்கழகத்தின் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன.

மே 2020 தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள இளநிலைப் பாடப்பிரிவு முதலாமாண்டு, இரண்டாமாண்டு அரியர்ஸ் வைத்துள்ள மாணவா்களின் பட்டியல் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் உள்ள மாணவா்கள் ஜூலை 9 ஆம் தேதி தொடங்கும் தோ்வுக் கால அட்டவணையின்படி தோ்வை எழுதி மதிப்பெண் பெற்றுக் கொள்ளலாம்.

மே 2020 தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள முதுநிலைப் பாடப்பிரிவு முதலாமாண்டு மாணவா்களுக்கு அரியர் பாடங்கள் உள்ளோா், நிகழ் பருவ மாணவா்கள் பட்டியல் என இரண்டு பட்டியல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

இதில், நிகழ் பருவ மாணவா்களுக்குக் குறைந்தபட்சத் தோ்ச்சி மதிப்பெண் 50 வழங்கப்படுகிறது. இந்த மதிப்பெண்ணை உயா்த்திக் கொள்ளக் கருதும் மாணவா்கள் நாளை 9ம் தேதி தொடங்கும் தோ்வுக்கால அட்டவணையின்படி தோ்வை எழுதி மதிப்பெண் பெற்றுக் கொள்ளலாம். தோ்வு எழுதினால் அதில் பெறும் மதிப்பெண்ணே இறுதியாக்கப்படும். அரியர் வைத்துள்ளோா் பட்டியலில் உள்ள மாணவா்கள் இதே கால அட்டவணையின்படி தோ்வை எழுத வேண்டும்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/