தஞ்சாவூர் மார்ச் :12 –  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றிய  நகர திராவிடர் கழகத்தின் சார்பில் அன்னை ஈவேரா மணியம்மையார் அவர்களின்  பிறந்தநாள் விழா எழுச்சியோடு கொண்டாடப்பட்டது உலகிலேயே ஒரே நாத்திக இயக்கத்தின் தலைவர் அன்னை ஈவேரா மணியம்மையார் அவர்களுக்கு 103 – ம் ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது.

ஒரத்தநாடு நகர ஒன்றிய திராவிட கழகத்தின் சார்பில் அன்னை மணியம்மையார் அவர்கள் படத்திற்கு மாலை அணிவித்து பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ஒரத்தநாடு நகர திராவிடர் கழகத் தலைவர்  பேபி ரவிச்சந்திரன்  தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

அன்னை மணியம்மையார் பிறந்தநாள்


தஞ்சை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் அ அருணகிரி மாநில பெரியார் வீர விளையாட்டு கழக செயலாளர் நா. ராமகிருஷ்ணன் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக துணைச் செயலாளர் அ உத்திராபதி நகர திராவிடர் கழக செயலாளர் ரஞ்சித் குமார் ஒன்றிய திராவிடர் கழக அமைப்பாளர் மாநல் பரமசிவம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர் நெடுவை கு.நேரு நகர இளைஞரணி தலைவர் செந்தில்குமார் நகர இளைஞரணி செயலாளர் பேபி ரமேஷ் நகர திராவிடர் கழக இளைஞரணி துணை தலைவர் சக்கரவர்த்தி ஆனந்தன் நகர இளைஞரணி பொறுப்பாளர் ராஜேஷ் உள்ளிட்ட கழக பொறுப்பாளர்கள் மற்றும் சான்றோர் பெருமக்கள், கலந்துகொண்டனர்.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/