தஞ்சை :ஜன:5,
தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் சம்பா தாழடி அறுவடை என்பது நடைபெற்று நெல் என்பது உத்தமர்குடி உள்ளிட்ட பல அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்த நெல்லுடன் 10 நாட்கள் விவசாயிகள் காத்துகிடக்கும் நிலை உள்ளது இதுவரை நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கபடாமல் மழையில் நெல்கள் நனைந்து வருகின்றது.

இது போல் காயவைப்பதும், நனைவதுமாக இருக்கிறது, இதனால் நெற்கள் முளைத்தும் வருகின்றது எனவே உடனடியாக அம்மாபேட்டை பகுதில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உத்தமர்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் ஆர்.செந்தில்குமார் தலைமையில், நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொருளாளர் பி.தாமரைச்செல்வி, ஒன்றியக்குழு உறுப்பினர் கோ.கண்ணன், கோ.பழனிச்சாமி, எஸ்.உத்திரபாதி, கிளை செயலாளர்கள் ஆர்.ரமேஷ், ஜீ.காமாட்சி, டி.ராஜேந்திரன்,மாதர் சங்க தலைவர் எஸ்.லதா,உள்ளிட்ட நெல்லோடு காத்திருக்கும் விவசாயிகள் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்