தஞ்சை பிப். 26: தஞ்சை மாவட்ட அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் மூன்றாவது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதுதொடர்பாக 20 பெண்கள் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூபாய் 3000, கடும் ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 5000 நிவாரண உதவித் தொகையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கத்தினர் ஏற்கனவே கோட்ட அலுவலகம் மற்றும் தாசில்தார் அலுவலகம் குடியேறும் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி முதல் மீண்டும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் மூன்றாவது நாளாக இந்த போராட்டம் நீடித்தது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட துணை செயலாளர்கள் செந்தில்குமார் கிறிஸ்டி ஒரத்தநாடு பிரபாகரன் கஸ்தூரி ராதிகா திருவோணம் ராஜரத்தினம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர் இதேபோல் மாவட்டம் முழுவதும் மூன்று இடங்களில் நடந்த போராட்டத்தில் 45 பெண்கள் உள்பட 116 பேர் கைது செய்யப்பட்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.