09.12.2020 இன்று தஞ்சை மருத்துவக்கல்லூரியில் இந்திய ஒன்றிய அரசு அலோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தை ஒன்றிணைத்து உருவாக்க இருப்பதற்கு அலோபதி மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும் இதனை எதிர்க்கும் விதமாக டிசம்பர் 11 அன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை தவிர்க்கும் போராட்டத்தையும் அறிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் நேற்று மருத்துவக்கல்லூரி போராட்டம் வளாகத்தில் நடைபெற்றது.
அவர்கள் கூறும் போது இந்திய மருத்துவ முறைகளை தனியாகத்தான் வளர்த்தெடுக்க வேண்டும் அதனை அலோபதியுடன் இணைந்து வழங்குவது நோயாளிகளுக்கு சிக்கலை உண்டு பண்ணக் கூடியதாக அமையும்.
இந்திய மருத்துவத்தை தனியாக வளர்த்தெடுப்பதன் மூலமாக அந்நிய செலாவணியை குறைக்கலாம் என்றும் அலோபதி மருத்துவர்கள் கூறினார்கள். ஆயூர் வேதம் மட்டுமல்லாது, யூனானி, சித்த மருத்துவம் யாவும் தனித்தனியாக வளர்த்தெடுக்க பட வேண்டும் என்பதே சரியாகும்.
இந்த போராட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தின் தஞ்சை மாவட்டத் தலைவர் மருத்துவர் மாரிமுத்து உட்பட பல மருத்துவர்கள் கலந்து கொண்டனர், மருத்துவர் ஜெகன் நன்றி கூறினார்.