தஞ்சாவூர் ஜன.01 அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் விரோதச் சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். 

அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவன பொருட்களை புறக்கணிப்போம். விவசாயத்தை பாதுகாப்போம், இந்தியாவை பாதுகாப்போம் என வலியுறுத்தி, டெல்லி உயிர் நீத்த தியாகிகள், விவசாயிகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்ன உறுதிமொழி எடுக்கப்பட்டது. 

தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் பி. செந்தில்குமார் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன் நிறைவுரை ஆற்றினார். 

நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் லட்சுமிநாராயணன், பி.ஜி.ராஜேந்திரன், ஜேம்ஸ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) கிருஷ்ணன், மக்கள் அதிகாரம் தேவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் என்.குருசாமி, தமுஎகச மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன், மாவட்டச் செயலாளர் விஜயகுமார், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் என்.சரவணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சத்தியநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பட்டுக்கோட்டை 

பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா, ஒன்றியத் தலைவர் மோரீஸ் அண்ணாதுரை, பாண்டியன், குலோத்துங்கன், சக்திவேல், ராஜதுரை, தமிழவன், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பூதலூர் தெற்கு 

பூதலூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு, ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராஜகோபால், வசந்தா, அஞ்சலிதேவி, சித்திரவேல், மருதமுத்து, ராஜாங்கம், கிளைச் செயலாளர்கள் கோவிந்தராசு, தங்கையன், வாலிபர் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் தமிழ்செல்வன்,  ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்கத்தலைவர் சோலை.தட்சிணாமூர்த்தி மற்றும் முருகானந்தம், வினோத், காந்திமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இதேபோல், தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.