தஞ்சாவூர், டிச.26: தஞ்சையில் புதிதாக தொடங்கப்பட்டு உள்ள சிவாஸ் ஐ.ஏ.எஸ். அகடாமியில் டி.என்.பி. எஸ்.சிக்கான அனைத்து வகையான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சிவாஸ் அகாடமியின் நிறுவனர் லயன்ஸ் சிவா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்திலேயே மிகவும் சிறப்புவாய்ந்த திறமைமிக்க ஆசிரியர்களை கொண்டு அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சிகள் சிவாஸ் அகாடமியில் நடைபெற்று வருகின்றன. இங்கு பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணிபுரிந்தவர்கள் அரசுத் துறைகளில் உள்ள உயர்ந்த பதவிகளுக்கு சென்று தற்போது பணியாற்றி வருகின்றனர்.
அதன்படி தஞ்சை மேரிஸ் கார்னர் அருகிலுள்ள தீன் காம்ப்ளக்ஸ்சில் எங்களது நிறுவனம் தொடங்கப்பட்டு, தற்போது டி.என்.பி.எஸ். சி.கான குரூப்-1 குரூப் 2, 2ஏ, குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ. ஆகிய போட்டி தேர்வுகளுக்கு வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. மாணவர்களின் சேர்க்கையும் தற்போது நடைபெறுகிறது. பல்வேறு வகையான தேர்வுகளுக்கு மாணவ மாணவிகள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள நபர்கள் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.
கடந்த 25-ம் தேதி டி.என்.பி.எஸ்.சி.க்கான ஃப்ரீ டெமோ கிளாஸ் தொடங்கப்பட்டது. தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பயிற்சி பெற வரும் அனைவருக்கும் போட்டித் தேர்வுகளுக்கானஅனைத்து வகையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தற்போது உள்ள போட்டியான உலகத்தில் போட்டித் தேர்வுகளில் எவ்வாறு எளிய முறையில் வெற்றி பெறுவது என்பது குறித்த தெளிவான விளக்கங்களுடன் பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/