தஞ்சை மே:1, தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி வாக்கு எண்ணும் மையம் வாக்குகளை எண்ணுவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது, தஞ்சை மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது, இதில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, சட்டமன்ற தொகுதிகளுக்கு பதிவான வாக்குகளை தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை பேராவூரணி சட்டமன்ற தொகுதி வாக்குகள் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணும் மையத்தில், கும்பகோணம் பாபநாசம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி வாக்குகள் கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன, இங்கு உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் பதிவான வாக்குகள் நாளை இரண்டாம் தேதி எண்ணப்படுகிறது.

இதில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது, இதற்கான ஒவ்வொரு தொகுதிக்கும் 4 மேஜைகள் போடப்பட்டு உள்ளன, பிறகு 8.30. மணிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சீல் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் உடைக்கப்பட்டு, அங்கிருந்து வாக்குப்பதிவு பெட்டிகள் வாக்கு எண்ணும் அறைக்கு உரிய பாதுகாப்புடன் எடுத்து வரப்பட உள்ளது, பின்னர் அங்கு போடப்பட்டுள்ள மேஜைகளில் பல்வேறு சுற்றுகளாக இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது, வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல உள்ள வேட்பாளர்கள் முகவர்கள் அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கு முன்னதாகவே பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது,

இதில் தொற்று உள்ளவர்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர், மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்ல அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் மட்டுமே செல்ல முடியும், வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அலுவலர்கள் பணியாளர்கள் அவர்கள் அனைவரும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட உள்ளனர்

மேலும் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை முடிவு செய்யப்பட்டுள்ளது உள்ளே செல்லும் முன் வெப்பமானி கொண்டு சோதனை விடவும் உள்ளனர், மேலும் வாக்கு எண்ணிக்கையின் போது தடையின்றி மின்சாரம் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது, மேலும் வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள குந்தவை நாச்சியார் அரசு கலைக் கல்லூரிக்கு செல்லும் தெற்கு வடக்கு சாலை பகுதியில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, அடையாள அட்டை இந்தச் சாலையில் செல்ல யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி இரவு நேரங்களில் ஒளிவீசும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன அத்துடன் கொரோனவைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முக கவசம் அணிந்து வரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கு கையுறை சானிடைசர் வழங்கப்பட்டுள்ளது இதையடுத்து தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரி வாக்கு எண்ணும் மையம் வாக்கு என்ன தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.\

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை