தஞ்சாவூர் அக்:18 உயர்ந்து வரும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை‌ கட்டுப்படுத்த வேண்டும்! .ஏஐடியூசி கட்டுமான சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்!! ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாநகர குழுக்கூட்டம் மாநகர தலைவர் பி. செல்வம் தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட ஏஐடியூசி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்ற கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது, கட்டுமானப் பணிகள் தேக்கம் அடைகின்றன. இவற்றை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், நலவாரிய ஆன்லைன் பதிவை காலதாமத படுத்தாமல் பதிவு நடவடிக்கைகளை தொடர வேண்டும், வருகின்ற டிசம்பர் 7ஆம் தேதி சென்னையில் கட்டுமான தொழிலாளர்களின் கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் தஞ்சை மாநகரில் இருந்து 500 கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது. நடைபெற்ற கூட்டத்தில் ஏஐடியூசி மாநில செயலாளர் சி.சந்திரகுமார், சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர். தில்லைவனம் ,ஏஐடியூசி மாவட்டத்தலைவர் வெ.சேவையா , தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர். பி .முத்துக்குமரன்.கட்டுமான சங்க நிர்வாகிகள் அன்னை சத்யா நகர் கே.விநாயகம், கீழவாசல் பி.நடராஜன், டி.தர்மதுரை, டி.பாலகிருஷ்ணன் கரந்தை கே.மாரிமுத்து, சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/