தஞ்சாவூர் அக்.27- தஞ்சை மாவட்டம் பூண்டியில் நடந்த  அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகள் திருமண வரவேற்பு விழாவில் சசிகலா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

முன்னதாக தஞ்சை அருளானந்த நகர் பகுதி பரிசுத்தம் நகரில் உள்ள தனது பங்களாவில் தங்கி இருந்த சசிகலாவை காண்பதற்கு அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டனர். அப்போது அவர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச்செயலாளர் சசிகலா, ஜெயலலிதாவின் மறு உருவம் சசிகலா, தமிழகத்தின் அடுத்த முதல்வர் சசிகலா, தியாகத் தலைவி சசிகலா என்று கோஷங்கள் எழுப்பினர். அப்போது சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து வந்திருந்த ஆதரவாளர்கள் சசிகலாவுக்கு வீரவாள் பரிசளித்தனர்.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/