தஞ்சை மே 08, தஞ்சை மாவட்டம் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் கீழ் மதுக்கூர் வட்டாரத்தில் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டத்தின் கீழ் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி, அதிக பராமரிப்பு இன்றி குறைந்த செலவில் விவசாயிகள் அதிக மகசூல் மற்றும் அதிக வருமானம் பெற, 15 விவசாயிகளுக்கு தலா ஒரு ஹெக்டேருக்கு வீரிய மக்கா சோளம் சிபி 333 வழங்கப்பட்டு அதை 15 விவசாயிகள் விதைத்துள்ளனர்.

பிப்ரவரி மூன்றாம் வாரத்தில் விதைக்கப்பட்ட விதைகள் தற்போது 60 நாள் பயிராக வயலில் உள்ளது, அதிக நீர் தேவை இன்றி, உரச் செலவும் இன்றி, விவசாயிகளின் வயலில் பயிரானது. அதிக அளவு மக்காச் சோளக் கதிர்கள் வைத்துள்ளது, இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூபாய் 5000 மானியத்தில் வீரிய மக்காச்சோள விதைகள் விதைநேர்த்தி செய்வதற்கான டி விரிடி, அசோஸ்பைரில்லம், பாஸ்போர்பாக்டீரியா போன்ற உயிர் உரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மற்றும் மக்காச்சோளத்தில் தாக்குதல் ஏற்படுத்தும் படைப்புழுக்களை கட்டுப்படுத்திட இனக்கவர்ச்சிப் பொறிகள், அசாடிராக்டின், வேம்பு மருந்து மற்றும் ரசாயன உரங்கள் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது, குறித்து மதுரை வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி கூறுகையில், மிகச் சிறந்த முறையில் பராமரித்து குறைந்த செலவில் வளர்த்த மக்கசோள விவசாயிகளுக்கு விருதுகள் வழங்க உள்ளதாக கூறியிருக்கின்றார்.

இதனால் பயிரில் அதிக ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர், பச்சை மக்காச்சோள கதிர்களை விற்றால் அதிக லாபம் கிடைக்கும், மக்காச் சோளத் தட்டைகளை விவசாயிகளின் வளர்க்கும் கால்நடைகளுக்கு நல்ல தீவனமாகும், மிக மிக குறைந்த செலவில் நல்லதொரு வருமானத்தையும் தங்கள் கால்நடைகளுக்கு தீவனத்தையும் பெற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி விளக்கம் அளித்துள்ளார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை.