பூதலூர்-பிப்ரவரி 09;
விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.அதனொருபகுதியாக வி.தொ.ச பூதலூர் ஒன்றியக்குழு சார்பில் செவ்வாய் காலை வி.தொ.ச ஒன்றிய செயலாளர் செயலாளர் டி.இராமச்சந்திரன் தலைமையில் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிராக கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் இரா.இராமச்சந்திரன்,சி.பி.ஐ, வி.தொ.ச, நிர்வாகிகள் கே.செந்தில்குமார், எம்.துரைராஜ்,ஆர்.ஆர்.முகில்,டி.கண்ணகி,எம்.ஜி.கணபதிசுந்தரம்,
டி.நாகராஜ்,கவுன்சிலர் சு.லதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் கீழ்காணும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.முடிவில் தலைமையிடத்து துணை வட்டாட்சி அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

01.சமூகத்தின் அடித்தட்டில் வாழும் நிலமற்ற தொழிலாளர்களுக்கு, பட்டியல் சாதியினர், பழங்குடியினர் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் கட்டிக் கொடுக்கப்பட்ட இலவச வீடுகள் முற்றிலுமாக பழுதடைந்து, அவைகளில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு 15 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பழைய, பழுதடைந்த வீடுகளை இடித்துவிட்டு, 400 சதுர அடியில் ரூபாய் 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய இலவச வீடுகள் கட்டித் தர வேண்டும்.*

02.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வழங்கப்படும் வேலை நாட்களை ஆண்டுக்கு 200 நாட்களாக உயர்த்த வேண்டும்.

  1. வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச தினசரி ஊதியமாக ரூ 600/= நிர்ணயித்து வழங்க வேண்டும்.

நடப்பில் உள்ள ஊதியத்தை வாரா, வாரம் முழுமையாக பாக்கியில்லாமல் வழங்க வேண்டும்.

  1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நகரப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி செயப்படுத்த வேண்டும் . இதற்கான முறையில் நகராட்சி சட்டத்தில் பொருத்தமான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.
  2. முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத் திட்டத்தை மேம்படுத்தி, முறையாகவும், முழுமையாகவும் செயல்படுத்த வேண்டும். இத் திட்டச் செயலாக்கம் பற்றி கண்காணிக்க வட்ட அளவில் விவசாயத் தொழிலாளர் பிரதிகள் கொண்ட கண்காணிப்புக் குழுக்கள் அமைக்க வேண்டும்.

    செய்தி க.சசிகுமார் நிருபர்,
    தஞ்சை.