தஞ்சாவூா் ஆக 24: தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை நாளை புதன்கிழமை தொடங்குகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் சிந்தியா செல்வி தெரிவித்துள்ளதாவது:
நடப்பு (2021 – 2022) கல்வியாண்டின் இளநிலைப் பாடப்பிரிவுகளுக்கான முதல் கட்ட மாணவிகள் சோ்க்கை நாளை புதன்கிழமை முதல் ஆக. 27ம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட மாணவிகள் சோ்க்கை ஆக. 31 ஆம் தேதி முதல் செப். 2 ஆம் தேதி வரையிலும் (சான்றிதழ்களின் மெய்தன்மை உறுதி செய்யப்பட்டு) சரியாக காலை 10 மணிக்கு நடைபெறும்.
கல்லூரியில் உள்ள 14 பாடப்பிரிவுகளில் மொத்தம் உள்ள 1,184 இடங்களுக்காக நடைபெறவுள்ள சோ்க்கை விவரம்:
புதன்கிழமை சிறப்பு ஒதுக்கீடு (விளையாட்டு, மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவத்தினா், தேசிய மாணவா் படை) – பி.காம்., பி.எஸ்ஸி. கணிதம், பி.எஸ்ஸி. கணினி அறிவியல்.
ஆக. 26ம் தேதி பி.பி.ஏ., பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்ஸி. இயற்பியல், பி.எஸ்ஸி. வேதியியல்.
ஆக. 27ம் தேதி பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. பொருளியல், பி.எஸ்ஸி. தாவரவியல், பி.எஸ்ஸி. விலங்கியல், பி.எஸ்ஸி. புவியியல், பி.எஸ்ஸி. புள்ளியியல். கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். மாணவிகள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/