தஞ்சை சூன் 30: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் ஏற்பட்ட ராட்சத அலையால் படகு கவிழ்ந்து ஆபத்தான நிலையிலிருந்த அதிரை மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

அதிராம்பட்டினம் கரையாரி தெருவைச் சேர்ந்த சக்திவேல் தனக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியைச் சேர்ந்த நாகூர் பிச்சை, பாஞ்சாலன், நந்தகுமார், முருகேசன் ஆகியோருடன் மீன்பிடிக்க கோடியக்கரை கடல் பகுதிக்கு சென்றார்.

மீன்பிடித்து விட்டு திரும்பும்போது முத்துப்பேட்டை கடல் பகுதியிலிருந்து சுமார் 1. 5 நாட்டிக்கல் மைல் தொலைவில் திடீரென ஏற்பட்ட ராட்சச அலை காரணமாகப் படகு கவிழ்ந்து. இதனால் மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதில் நந்தகுமார், முருகேசன், சக்திவேல் ஆகியோர் தட்டு தடுமாறி படகில் ஏறி விட்டனர்.

பாஞ்சாலன், நாகூர் பிச்சை ஆகிய இருவரும் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு விட்டனர். பின்னர் படகில் ஏறிய அந்த மூன்று மீனவர் கிராம மக்கள் தகவல் கொடுத்தனர்.

உடனடியாகக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடலில் தத்தளித்த இரண்டு மீனவர்களையும் கண்டுபிடித்து உயிருடன் மீட்டனர் இதில் பாஞ்சாலன் என்ற மீனவர் ஆபத்தான நிலையிலிருந்து இருந்ததால் அதிராம்பட்டினம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்