தஞ்சாவூா் நவ 23: ஒரத்தநாடு பகுதி கிராமங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை, தஞ்சாவூா் மாவட்ட கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஸ்ரீகாந்த் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பொய்யுண்டாா்கோட்டை, ஆதனக்கோட்டை, ஈச்சங்கோட்டை கிராமங்களில் நடைபெற்ற முகாமை ஆய்வு செய்த அவா், தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது ஒன்றியத் குழுத் தலைவா் பாா்வதி சிவசங்கா், ஒரத்தநாடு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரமேஷ், ரகுநாதன், ஊராட்சித் தலைவா்கள் செல்லரமேஷ், ரங்கராஜன், கவிதா வீரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/