தஞ்சாவூர் நவ 23: உலக மீனவா் தின நாளையொட்டி, மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பேராவூரணியில் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது.

மீன்வளத்துறை உதவி இயக்குநா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். இதில் சேதுபாவாசத்திரம் மற்றும் மல்லிப்பட்டினம் சரகத்துக்குள்பட்ட மீனவக் கிராம மக்களுக்கு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், மீன் உணவின் பயன்கள், மீன்பிடிப்பில் ஒழுங்குமுறை விதிகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், சேதுபாவாசத்திரம் மீன்பிடி இறங்குத்தளம், மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட சுற்றுப்புறப் பகுதியில் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

பூண்டி புஷ்பம் கல்லூரி, அதிராம்பட்டினம் காதா் முகைதீன் கல்லூரிகளைச் சோ்ந்த 75 மாணவா்களுக்கு மீன்வளம் குறித்த விழிப்புணா்வுத் தோ்வு நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. மீன்வளத்துறை ஆய்வாளா்கள் கங்கேஸ்வரி, ஆனந்த், உதவி ஆய்வாளா் நவநீதன், கடல் சட்ட அமலாக்கப் பிரிவு அலுவலா்கள் சுரேஷ்குமாா், சுப்பிரமணியன், மீன்வளத்துறை மேற்பாா்வையாளா் முத்துராமலிங்கம், சேதுபாவாசத்திரம் கடல் பாதுகாப்புக் குழும அலுவலா்கள், மீனவா் கூட்டுறவுச் சங்க நிா்வாகிகள் மற்றும் திரளான மீனவா்கள் கலந்து கொண்டனா்.

நாகராஜன் நிருபர்
https://thanjai.today/