தஞ்சாவூர் அக்.6- வடகிழக்கு பருவமழையால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்ற வேண்டும் என அனைத்து துறையினருக்கு வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி அறிவுரை வழங்கினார்.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது இதற்கு வருவாய் கோட்டாட்சியர் 7 மணி தலைமை தாங்கினார் வட்டாச்சியர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், முன்னிலை வகித்தார். இதில் தஞ்சை வருவாய் கோட்டத்தில் பணிபுரியும் நெடுஞ்சாலைத்துறை கால்நடை துறை தீயணைப்புத் துறை விவசாயத்துறை கல்வித்துறை மாநகராட்சி நிர்வாக பணியாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி பேசியதாவது வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாய்ந்தபடி என்ற மின்கம்பங்களை நேராக நிமிர்த்தி வைத்துள்ளோம் தாழ்வாக சென்ற மின்கம்பிகள் உயரமாக கட்டப்பட்டுள்ளது. இதேபோல் நீங்கள் செல்லக்கூடிய இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து மின் கம்பிகளில் தாழ்வாகவோ சென்றால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதற்காகவே வடகிழக்கு பருவமழை தங்கை வருவாய் கோட்டம் என்ற பெயரில் வாட்ஸ்அப் குழு அமைக்கப்பட்டுள்ளது. மரம் முறிந்து விழுந்தால் யாராவது உயிருக்கு போராடினார் தண்ணீர் தேங்கி நின்றால் இந்த குடிநீர் பதிவு செய்தால் சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக விரைந்து வந்து நடவடிக்கை மேற்கொள்வார்கள். மழைக்காலத்தில் யாருக்கும் எந்த கஷ்டம் ஏற்படக்கூடாது ஒரு உயிர் கூட பலியாகக்கூடாது எந்த ஆபத்தும் இன்றி வடகிழக்கு பருவமழை கடந்து செல்ல வேண்டும் அந்த வகையில் அனைத்துத் துறையினரும் பணியாற்ற வேண்டும் என அவர் பேசினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/