தஞ்சாவூர் அக்: 17-தஞ்சாவூர் மாவட்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பேராவூரணி ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு கூட்டம் பேராவூரணியில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பேராவூரணி தாசில்தார் சுகுமார் தலைமை வகித்தார் முத்திரைத்தாள் கட்டணம் தனி துணை கலெக்டர் ஐவண்ணன் பேசுகையில் தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதனடிப்படையில் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்த வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது தடுப்பூசி முதல் தவணை இரண்டாவது தவணை செலுத்தி கொண்டவர்கள் குறித்து வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் கணக்கெடுக்க வேண்டும் இதில் தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதால் தான் உயிரிழப்பு பெருமளவு தடுக்கப்பட்டது.

எனவே நமது பொறுப்பை உணர்ந்து சேவையாற்ற வேண்டும் அதிகாரிகள் கணக்கெடுக்க வரும்பொழுது பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார் கூட்டத்தில் தேர்தல் துணை தாசில்தார் சுந்தரமூர்த்தி மண்டல துணை தாசில்தார் கவிதா மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் உள்ளிட்டோர் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/