தஞ்சை மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர் அவர்களின் பாதுகாப்புக்காக காவலர்கள் வாகனங்களில் தொடர்ந்து வந்தனர் இந்த வாகனம் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
மதுக்கூரில் ஆய்வினை முடித்து மத்திய குழுவினர் அடுத்த பகுதிக்கு ஆய்வுக்கு சென்று கொண்டிருந்தபோது பட்டுக்கோட்டை தஞ்சாவூர் சாலையில் உள்ள பாப்பா நாடு- மதுக்கூர் பிரிவு சாலை அருகே முன்னால் சென்ற நெடுஞ்சாலைத்துறை வாகனம் திடீரென நின்றதால் பின்னால் பாதுகாப்புக்கு வந்த போலீசாரின் வாகனம் அரசு வாகனம் மீது வேகமாக மோதியது, அதைத் தொடர்ந்து வந்த பொதுப்பணித்துறை வாகனங்கள் அடுத்தடுத்து மோதி கொண்டன.
இந்த விபத்தில் போலீசாரின் வாகனம் அரசு வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றோடு ஒன்று மோதியதில் போலீசார் காயம் அடைந்தனர் இதில் 4 வாகனங்களும் சேதமடைந்தன,
க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்