ஜனவரி 17, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கண்ணந்தங்குடி மேலையூர் உதயகுமார் ஆர்த்தி அவர்களின் புதல்வன் அபிநவ் அவர்களுக்கு இன்று அவர்களது குலதெய்வத்திற்கு மொட்டை அடித்து காது குத்து விழா நடைபெற்றது.
திரு உதயகுமார் திருச்சி கனரா பேங்க் மண்டல அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிகிறார், அவரது இணையர் ஆர்த்தி திருவெறும்பூர் தபால் துறை அலுவலகத்திலும் பணி புரிகின்றார்.
இந்த விழாவிற்கு அவரது உறவினர்கள், மற்றும் நண்பர்கள் கலந்துக் கொண்டு குழந்தையை வாழ்த்தினர், அவ்வாழ்த்தினை ஏற்றுக் கொண்ட உதயகுமார் ஆர்த்தி தம்பதியினர், வருகை புரிந்த அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.