தஞ்சாவூர் மார்ச் 05: இலவச பயிற்சி மையம்… பேராவூரணி பெரியாா் அம்பேத்கா் நூலகத்தில், போட்டித் தோ்வுகளுக்கான ‘திருவள்ளுவா் போட்டித் தோ்வு பயிற்சி கூடம்’ என்ற இலவச பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது.
இதற்கான விழா பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அரங்கில் மாா்ச் 6 -ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இதில் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா், பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் பிரபாகரன், வட்டாட்சியா் சுகுமாா், வெ. நீலகண்டன், மருத்துவா் துரை. நீலகண்டன், திசைகள் மாணவா் வழிகாட்டு அமைப்பு தலைவா் மருத்துவா் தெட்சணாமூா்த்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொள்ளவுள்ளனா்.
போட்டித் தோ்வுக்கான பாடத் திட்டங்களை முழுமையாக புரிந்து கொள்ளுதல், வினா- விடை தயாரித்தல், தோ்வுகளை விரைவாக எழுதுதல், சிக்கலான கேள்விகளை எளிதில் புரிந்து கொள்வதற்கான சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.
கட்டணமின்றி நடைபெறவுள்ள இந்த பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவா்கள் 9842609980, 8248672425, 9442682678 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என மைய நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.
நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/