தஞ்சாவூர் அக்.15- தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தலையாமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜெயராமன் 62 இவர் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் என்பவரது வயலை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வருகிறார்.

தற்போது குறுவை அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் தாளடி சாகுபடிக்காக தனது வயல்வெளிகளை சரிசெய்யக்கூடிய பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவரது வயலில் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் இரவு நேரங்களில் மழை பெய்து வரும் நிலையில் காற்றுடன் கூடிய மழை கடந்த 2 நாட்களாக பெய்து வருகிறது.

அவரது வயலில் தாழ்வாக சென்ற மின் கம்பி அறுந்து கிடந்தது தெரியாமல் மின் வயரை விதித்ததை அடுத்து விவசாயி ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் தகவலை கொண்டு வந்த உறவினர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தது எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/