தஞ்சாவூர் ஆக: 13- நெருக்கடியான சூழலில் வரிச்சுமை இன்றி வரவேற்கத்தக்க பட்ஜெட் பிஆர்.பாண்டியன் கருத்து.


உலகமே கொரோனா பேரிடர் காலத்தில் பொருளாதாரம் விழுந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசாங்கம் நீதி நிலை அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது.


இதற்கு முன் வெள்ளை அறிக்கையும் வெளியிடப்பட்டிருக்கிறது அதனடிப்படையில் தமிழக அரசின் பட்ஜெட் மக்களை பாதிக்கும் என்ற அச்சத்தில் காத்திருந்த நிலையில் கடும் நிதி நெருக்கடியிலும் மக்கள் தலையில் வரி சுமையையும்,கடன் சுமையையும் சுமத்தாமல் தொலைநோக்குப் பார்வையோடு சில திட்டங்களை உள்ளடக்கி வரவேற்கத்தக்க பட்ஜெட்டாக அமைந்துள்ளது.


குறிப்பாக நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு தமிழக அரசின் வரி வருவாயில் இருந்து௹ 6607 கோடி ரூபாயும்,நபார்டு ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.


பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 3 குறைத்து இருப்பதும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் ரத்து செய்யப்படும், இலவச மின்சாரத்திற்காண மானியம் ரூபாய்19 872 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதும், பருவநிலை மாற்றங்களில் இருந்து பாதுகாக்க பசுமை இயக்கம் உருவாக்கப்பட்டு மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை தொடர்வதும், மேட்டூர் வைகை உள்ளிட்ட அணைகளின் நீர் கொள்ளளவை உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதும்,சித்தா மருத்துவ பல்கலைக்கழகம் ஏற்படுத்தியுள்ளதும் மிகுந்த வரவேற்பு அளிக்க கூடியதாகும்.


அதேநேரத்தில் 1000 தடுப்பணைகள் வரவேற்க்கத்தக்கதே ஆனால் 10 ஆண்டுகால அவகாசத்தை 5 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். விவசாய நகை கடன் தள்ளுபடி செய்தது நிறுத்தி உள்ளதையும், டீசலுக்கான விலை குறித்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது,எனவே இவைகள் குறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய முன்வர வேண்டும்என்றார்.


மேற்கண்டவாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதனை ஊடகம் பத்திரிகைகளில் வெளியிட்டு உதவிட வேண்டுகிறேன் என்று இன்றைய திமுக அரசின் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/