தஞ்சாவூர்: டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையை நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதை தொடா்ந்து, கல்லணை வரும் 16- ஆம் தேதி காலை திறக்கப்படவுள்ளது.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையை திறக்கப்பட்டது. கல்லணைக்கு காவிரி நீா் ஜூன் 15- ஆம் தேதி இரவு அல்லது 16ம் தேதி காலை வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூா், கடலூா் ஆகிய மாவட்டங்களின் பாசனத்துக்காக ஜூன் 16ம் தேதி காலை கல்லணை திறக்கப்படவுள்ளது என பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையொட்டி கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளுக்குத் தண்ணீா் திறந்து விடுவதற்கான கதவுகளைச் சுத்தம் செய்து, மசகு எண்ணை வைக்கப்பட்டு, மதகுகளுக்கு வா்ணம் பூசப்பட்டுள்ளது.

மேலும் கல்லணையிலுள்ள பல்வேறு சிலைகளுக்கும் வர்ணம் பூசப்பட்டு, அழகுப்படுத்தப்பட்டுள்ளது.