தஞ்சாவூர் டிச, 29 :பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி தமிழ் தேசியக் கட்சியினர் போராட்டம் 5 பேர் கைது தஞ்சை புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள 75 அடி உயர செல்போன் கோபுரத்தில் தமிழ் தேசியக் கட்சியினர் ஏறி போராட்டம் நடத்தினர்..

மாவட்ட செயலாளர் கதிரேசன் தலைமையில், மாவட்ட இளைஞரணி தலைவர் சிவா முன்னிலையில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் தண்டனை பெற்றிருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ,ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார்  7 பேரை விடுதலை செய்ய காலம் தாழ்த்தும் மத்திய அரசையும் தமிழக கவர்னரும் கண்டித்து தமிழ்த் தேசியக் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு பாரதிராஜா மருத்துவக்கல்லூரி இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செல்போன் கோபுரத்தில் ஏறி அவர்களை கீழே இறங்கி வரும்படி அழைத்தனர் உடனே அவர்கள் கீழே இறங்கி வராமல் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் தொடர்ந்துபோராட்ட வீரர்கள் கோபுரத்தின் உச்சிக்கே சென்று கோஷங்களை எழுப்பினர் போலீசார் தொடர்ந்து அவர்களை கீழே இறங்கி வரும்படி போலீசார் அழைத்தனர் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

போராட்டத்தில்ஈடுபட்ட 12 பேரும் கீழே இறங்கி வந்தனர் பின்னர் அவர்களை போலீசார்  கைது செய்து மருத்துகல்லூரி காவல் நிலையத்திற்கு ஜீப்பில் அழைத்துச் சென்றனர் இவர்களில் 5 பேரை போலீசார் கைது செய்தனர், மற்றவர்கள் விடுவிக்கப்பட்டனர் இச்சம்பவம் ,தஞ்சைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்