தஞ்சாவூர் ஆக:16. தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். சமாதானத்தைக் குறிக்கும் வகையில் மூவர்ண பலூன்களையும் சமாதான புறாக்களையும் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் எஸ்,பி., ரவளி பிரியா காந்தபுனேனி ஆகியோர் பறக்க விட்டனர்.

பல்வேறு துறைகளில் மகத்தான பணி புரிந்த 28 அலுவலர்களுக்கும், விரைவான தடுப்பு பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த 119 சுகாதாரத்துறை மருத்துவர்கள் பணியாளர்கள் அலுவலர்களுக்கும் சிறப்பு திட்ட பணிகளில் சிறப்பாக பணிபுரிந்த 62 அலுவலர்களுக்கும் மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக செயல்பட்டவர்கள் என மொத்தம் 209 அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் பொன்ராஜ் அறிவர் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தஞ்சை சரக டிஐஜி பர்வேஷ் குமார், எஸ் பி ரவளி பிரியா காந்தபுனேனி, வருவாய் கூடுதல் ஆட்சியர் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் உதவி ஆட்சியர் (பயிற்சி) வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரங்கநாதன் (பொது) தஞ்சை தாசில்தார் மணிகண்டன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார். நிருபர்,
http://thanjai.today/