தஞ்சை சன 26 இன்று காலை ஈச்சங்கோட்டை மேல் நிலைப் பள்ளியில், 73வது குடியரசு தினம் பள்ளியின் சார்பில் கொண்டாடப்பட்டது . அது சமயம், தஞ்சாவூர் AMC தலைவர் MJF லயன் அமல். ஸ்டாலின் பீட்டர் பாபு, நமது தேசிய கொடியை ஏற்றி, கோவிட் 19 தொற்று காலத்திலும் தன் கிராமங்களில் கோவிட் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டதோடு, தஞ்சாவூர் AMC லயன்ஸ் சங்கத்தால் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில் சேவை செய்த மாணவர்களை பாராட்டி சான்றிதழ், பேனா, புத்தகங்கள் கொடுத்து கெளரவிக்கபட்டது.

மேலும், அப் பள்ளியில் அமைய இருக்கும் லைப்ரரிக்கு பேன் மற்றும் நல்ல புத்தகங்களை வழங்கவும், அப் பள்ளியில் IAS பயிற்சி பயிலரங்கம் நடத்திட ஊக்கம் கொடுக்க சங்கத்தின் சார்பில் முன்னெடுக்கப்படும் என்று அதன் தலைவர் MJF லயன் அமல். ஸ்டாலின் பீட்டர் பாபு அவர்கள் உறுதி அளித்துள்ளார்.

செய்தி நிருபர் தஞ்சை டு‍டே.
http://thanjai.today/