தஞ்சை மே 06 தஞ்சை இந்திய சுதந்திர போரை தொடர்ந்து விடுதலை இந்தியாவில் நிலவி வந்த நிலவுடமை பண்ணைகள், ஜமீன்கள், மடங்களின் கொடுமைக்கு எதிராக அந்நாளில் ஒருங்கிணைந்த தஞ்சைமாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர். சீனிவாசராவ் தலைமையில் தஞ்சை மாவட்ட மக்கள் கிளர்ந்தெழுந்தனர்.
அப்போது கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்து. இருப்பினும் தலைவர்கள் தலைமறைவாக இருந்து வர்க்கப் போராட்டத்தை நடத்தி வந்தார்கள். சானிப்பால் சவுக்கடிக்கு எதிராகவும், குத்தகைதாரர்கள் பாதுகாப்பு, கூலிஉயர்வு கேட்டும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும் தலைமறைவாக இருந்து கொண்டு போராடிய கம்யூனிச தியாகிகளான வாட்டாக்குடி இரணியன், ஜாம்பவான் ஓடை சிவராமன் , ஆம்பலாபட்டு ஆறுமுகம் போன்றோர் போராடினர்.
இவ்வாறு போராடிய கம்யூனிச தியாகிகளான வாட்டாக்குடி இரணியன், ஜாம்பவான் ஓடை சிவராமன் , ஆம்பலாபட்டு ஆறுமுகம் ஆகியோர்காவல் துறையினரால் 1950 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் 71 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி தஞ்சாவூர் ரயிலடி முன்பு தஞ்சை இடதுசாரிகள் பொதுமேடை சார்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் சி. சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.
இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன் ‘
சிபிஐ(எம்) மாநகரக்குழு உறுப்பினர் சி. ராஜன், சிபிஐ(எம்.எல். லிபரேஷன்) மாவட்டநிர்வாகி கே. ராஜன், மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநகர செயலர் இராவணன், மக்கள்அதிகாரம் மாநகர நிரவாகி அருள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகரக்குழு உறுப்பினர் எம். போஸ்கனி,
எஐடியுசி மாவட்ட தலைவர் வெ.சேவையயா, சிஐடியு மாநகரகுழு உறுப்பினர் ராஜா, ஜெயப்பிரகாஷ், தமிழ்தேசிய மக்கள் முன்னணிநிர்வாகி ஜான், சமுக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் ஆகியோர் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் நிலவுடைமை பண்பாட்டு விழுமியங்கள் துடைத்தெறிவோம் ,சாதி ஆதிக்க சக்திகளை, ஆணவக்கொலைகளை முறியடிப்போம், கார்ப்பரேட் காவி பாசிச சக்திகளிடமிருந்து மண்ணையும் ,மக்களையும் பாதுகாப்போம், இடதுசாரி சக்திகள் ஒண்றிணைவோம், வர்க்க போராட்டத்தை முன்னெடுப்போம் என்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. முன்னதாக தியாகிகள் உருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.