தஞ்சாவூர் டிச:6 – தஞ்சையில் அம்பேத்கரின் நினைவு நாளில் தீண்டாமைக் கொடுமைகளை முற்றிலும் ஒழித்திட உறுதி ஏற்பு. இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 65வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி தஞ்சாவூர் ரயிலடி முன்பு அனைத்து கட்சி மற்றும் இயக்கங்கள் சார்பில் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன் தலைமை வகித்தார். தமிழர் தேசிய முன்னணி தேர்தல் பணிக்குழு உறுப்பினர் அயனாபுரம் சி.முருகேசன், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர். சு. பழனிராஜன், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் இரா.அருணாசலம், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை. மதிவாணன், மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநகர செயலாளர் ராவணன், மனித நேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் ஏ.ஜெ.அப்துல்லா, ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, மாதர் சங்க மாவட்ட செயலாளர் ம.விஜயலட்சுமி, மக்கள் அதிகாரம் நிர்வாகிகள் அருள், தேவா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி துணைச் செயலாளர் என்.சிவகுரு , எழுத்தாளர் சாம்பான்,விடுதலை சிறுத்தை கட்சியின் மாநகர செயலாளர் கே.தமிழ் முதல்வன், நிர்வாகி ஒய்.யோகராஜ், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் எம்.பி.நாத்திகன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிர்வாகி ஆலம் கான், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ஆர்.செந்தில்நாதன், நிர்வாகி சாமிநாதன், சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் சாதி ஆணவப் படுகொலைகள், தீண்டாமைக் கொடுமைகளை தமிழ் நாட்டிலிருந்து முற்றிலும் ஒழித்திடவும், சமூகநீதியை பாதுகாக்கவும், ஏற்றத்தாழ்வற்ற, சாதிஒழிந்த தமிழ்நாட்டை உருவாக்கிடவும், காவி பசிச கார்ப்பரேட் சக்திகளை நாட்டிலிருந்து விரட்டியடிக்கவும் அம்பேத்கரின் நினைவு நாளில் உறுதியேற்கப்பட்டது. தஞ்சை நகரின் மையப்பகுதியில் டாக்டர் அம்பேத்கர் நினைவு மண்டபம் அமைத்திட தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/