தஞ்சாவூர் நவ :2-தஞ்சை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் 105 பணியாளர்களுக்கு ஒரே நாளில் ரூபாய் 6 கோடியே 25 லட்சம் ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட்டது தஞ்சாவூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் பணி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கப் பட்டு வருகிறது.

மாநகராட்சி கமிஷனராக கடந்த ஜூலை 15ம் தேதிசரவணகுமார் பொறுப்பேற்றதும் கட்டிமுடிக்கப்பட்ட அனைத்து கடைகளையும் ஏறும் போக வைத்தார் இதன் மூலம் கிடைத்த வருவாயை கொண்டு ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை வழங்கினர்.

ஒரு மாத மின்சார கட்டணடத்தை செலுத்த நடவடிக்கை மேற்கொண்டார், இந்நிலையில் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கும் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு சுமார் ரூபாய் 6 கோடியே 25 லட்சத்தை சம்பந்தப்பட்ட பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது இதனால் ஓய்வூதியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/