தஞ்சாவூர் அக்,11- தஞ்சை மாவட்டத்தில் நடந்த 5வது கட்ட தடுப்பூசி முகாம் 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அறை பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது, இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஏற்கனவே நான்கு கட்டங்களாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது இந்த நிலையில் ஐந்தாம் கட்ட மெகா மூகாம் தடுப்பூசி நேற்று நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்தில் 5வது கட்டமாக கொரோனா தடுப்பூசி முகாம் 840 இடங்களில் நடைபெற்றது. முதல் கட்ட முகாமில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேருக்கும், இரண்டாம் கட்ட முகாமில் 40 ஆயிரத்து 744 பேருக்கும், மூன்றாம் கட்ட முகாம் 1, லட்சத்து 4 ஆயிரத்து 17 பேருக்கும், நோய் தடுப்பூசி போடப்பட்டது மூன்றாம் முகாம்களிலும் இலக்கை தாண்டி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

நான்காவது கட்ட முகாமில் 44 ஆயிரத்து 358 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது இன்று மழை பெய்ததால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்படவில்லை தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 14 லட்சத்து 14 ஆயிரத்து 714 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது ஐந்தாம் கட்ட முகாமில் பள்ளிகள் கல்லூரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனைகள் என 840 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் இரவு 7 மணி வரை நடைபெற்றது.

பொதுமக்கள் வரவர தடுப்பூசி செலுத்தப்பட்டது ஒரே நாளில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தடுப்பூசி போடும் பணியில் 6 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் தஞ்சை தெற்கு வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடமாடும் வாகனம் மூலம் கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்டது இதனை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மாணவர் நல அலுவலர் மருத்துவர் நமசிவாயம் ஆகியோர் உடனிருந்தனர் இதேபோல கரந்தையில் உள்ள மாநகராட்சி பள்ளி மற்றும் சென்று அரங்கத்தில் உள்ள மாநகராட்சிப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதனால் தடுப்பூசி முகாமை தஞ்சை மாநகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர் நமசிவாயம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நேற்று 85 ஆயிரத்து 328 தடுப்பூசி போடப்பட்டது தஞ்சை மாவட்டத்தில் இலக்கு எட்டப்படவில்லை தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்ட தடுப்பூசி போடுவதை விட இரண்டாவது கட்ட தடுப்பூசி கொடுக்கும் எண்ணிக்கை குறைவாக உள்ளது தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 15 லட்சத்து 42, பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/