தஞ்சை பிப் 03 இன்று பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாள், திராவிட மற்றும் சமூக நீதி அரசியலுக்கு ராஜபாட்டை அமைத்து தந்தவர் பேரறிஞர் அண்ணா, பெரியாரின் பகுத்தறிவு பட்டறையில் கூர் தீட்டிக் கொண்டவர் அண்ணா அவர்கள்.

அண்ணா என்ற பெயருக்கு ஏற்றார் போல் நூற்றுக்கணக்கான திறமிகு தம்பிகளை தமிழக அரசியலில் உருவாக்கிய பெருமை அண்ணா அவர்களுக்குத்தான் சேரும்.

இன்றைய திராவிட கட்சிகள் செய்த அத்தனை சமூக நீதி திட்டங்களுக்கும் வித்திட்டவர் அண்ணா அவர்கள், மக்கள் மனதில் என்றும் நீங்காதிருக்கும் உயர் பெரும் செயலான மெட்ராஸ் மகாணத்தை “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றம் செய்தவர் அண்ணா.

இந்தி ஆதிக்கத்தை அன்று முதல் எதிர்க்கும் சரியான புரிதலை மக்களிடம் கொண்டு சென்றவர், மாநில உரிமைகளின் முக்கியத்துவம் உணர்ந்து அதனை எப்போதும் முன்னின்று முழுங்கியவரும் அண்ணா அவர்களே.

ஆற்றோழுக்கான ஆங்கிலம் மற்றும் தமிழ் புலமை உடைய அண்ணா அவர்கள் அதனை சமூக நீதி கருத்துகளுக்காகவே பயன்படுத்தியது அவரது தனிச்சிறப்பு.

இன்றைக்கும் அண்ணா அவர்கள் எற்படுத்திக் கொடுத்த சமூக நீதி மற்றும் மாநில உரிமைகள் என்கின்ற தத்துவத்தில் தான் அண்ணாவின் கொள்கையில் முகிழ்ந்த தமிழக அரசியல் தலைவர்கள் முன்னின்றுச் ‍செல்வதை அவரது 52வது நினைவு நாளில் நினைவு கூர்வோம்.

செய்தி ம.செந்தில்குமார்
தஞ்சை