தஞ்சை பிப் : 3.பேரறிஞர் அண்ணாவின் 52வது நினைவு நாளை ஒட்டி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு பல்வேறுபல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தஞ்சை மத்திய மாவட்ட பொறுப்பாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் கட்சியினர்திமுகவினர் மாலை அணிவித்தனர் இதில் முன்னாள் அமைச்சர் உபயதுல்லா டி.கே.ஜி நீலமேகம் எம்எல்ஏ செல்வம் முன்னாள் கவுன்சிலர் இறைவன் ஒன்றிய செயலாளர்கள் அருளானந்த சாமி முரசொலி செல்வகுமார் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மருத்துவர் அணி அஞ்சுகம் பூபதி தொண்டரணி கமலா பொருளாளர் அண்ணா நகர துணை செயலாளர் நீலகண்டன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் தொண்டர்களும் பெண்களும் இளைஞரணி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அதிமுக சார்பில் முன்னாள் எம்பி பரசுராமன் தலைமையில் அதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்நிகழ்வில் பால்வள தலைவர் காந்தி பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி புண்ணியமூர்த்தி சரவணன் ரமேஷ் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளர் வினுபாலன் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் ஒன்றிய செயலாளர்கள் துறை வீரன் சாமி வேடத்தில் கலியமூர்த்தி துணை மேயர் மணிகண்டன் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் நாகராஜன் எம்ஜிஆர் மன்ற ஒன்றிய செயலாளர் தனபால் ஊராட்சி தலைவர்கள் குளிச்சப்பட்டு இளவரசி கலியமூர்த்தி நீலகிரி வள்ளியம்மை பாஸ்கரன் அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் வீரராஜ் முன்னாள் கவுன்சிலர்கள் பூபதி சரவணன் மாணவரணி முருகேசன் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தலைமையில் பொதுச் செயலாளர் ஜெயக்குமார் கிராமப்புற அமைப்புச் செயலாளர் அதிரடி அன்பழகன் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் கோபு. பழனிவேல், மண்டலத் தலைவர் நெய்வேலி ஜெயராமன், மாணவரணி பொறுப்பாளர் செந்தூரப் பாண்டியன், நகர செயலாளர் முருகேசன், போட்டோ ,மூர்த்தி, உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கழக பொறுப்பாளர்களும் திராவிடர் கழகத் தோழர்களும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
செய்தி : க.சசிகுமார், நிருபர்,
தஞ்சை.