தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு 50% சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை புதன்கிழமை தொடங்கியது, பல்கலைகழக துணைவேந்தர் பாலசுப்ரமணியன் தொடங்கி வைத்தார்.


கடந்த செப்டம்பர் மாதத்தில் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் தமிழ் பல்கலைக்கழக நிறுவன நாளையொட்டி நடைபெற்ற சிறப்புக் கழிவு விலையில் நூல்கள் விற்பனையில் ரூ.19.20 லட்சம் மதிப்பிலான நூல்கள் விற்கப்பட்டன. தமிழக அரசின் ரூ. 2 கோடி நிதி உதவியில் மறு அச்சுத் திட்டத்தின்கீழ் 20 நூல்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும் 20 நூல்கள் மறு அச்சு செய்யும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது. என்றும் தமிழ்ப் பல்கலைக்கழக நூல்களை இணையவழியில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இத்திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.
தற்போது தொடங்கப்பட்டுள்ள சிறப்புத் தள்ளுபடி நூல்கள் விற்பனை மே மாதம் 14 ஆம் தேதி வரை தொடரும் என்றும் துணைவேந்தர் தெரிவித்தார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.