தஞ்சாவூர் சூலை 20: தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதுவரை 5 லட்சத்து 3 ஆயிரம் தடுப்பூசிகள் பொதுமக்களுக்குப் போடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
முன் கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள், மற்றும் கார் ஓட்டுனர்களுக்கான சிறப்புத் தடுப்பூசி முகாமினை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 3 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 4 லட்சத்து 20ஆயிரம் நபர்களுக்கும், இரண்டாம் தவணை 83 ஆயிரம் நபர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் நமச்சிவாயம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முகாமில் ஏராளமான ஓட்டுனர்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
கிட்டத்தட்ட 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட தஞ்சை மாவட்டத்தில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் வெறும் 5.3 லட்சம் என்பது ஆறில் ஒரு பங்கு மட்டுமே, உலகின் மற்ற நாடுகளில் 50 சதவீதத்திற்கு மேல் அந்த நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
தடுப்பூசிகள் முழுவதும் இந்திய ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது, நாட்டிலுள்ள பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தவில்லை என்றால் மீண்டும் ஒரு கொரோனா அலையில் மக்கள் அவதிப்படுவது உறுதி என்று மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்,
செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/