இந்த ஆண்ட நல்ல மழை மற்றும் காவிரி நீர் வரத்தில் பெரிய தடங்கல் இல்லாத காரணத்தாலும் முன்பட்ட குறுவை பயிர் நல்ல விளைச்சல் கண்டுள்ளது.
இந்நிலையில் அறுவடை செய்த நெல்லை நேரடிக் கொள்முதல் நிலையங்களில் உழவர்கள் விற்பதில் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர்.
முதலில் போதுமான நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் உழவர் சிரமத்திற்கு ஆளாகினர், பின்னர் நெல் மூட்டைகளை கொள் முதல் செய்வதில் தாமதம் மற்றும் ஒரு நாளைக்கு 3000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்ததாலும், மழையின் காரணமாக நெல் மூட்டைகள் நனைந்து வந்ததாலும் மேலும் உழவர்கள் சிரமத்திற்கே ஆளாகினர்.
இதனை அறிந்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் திரு கோவிந்தராவ் அவர்கள் ஒரு நாளைக்கு 10000 மூட்டைகள் என்ற விகிதத்தில் கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.