தஞ்சாவூர் ஆக.11முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தஞ்சை மாதாக்கோட்டை சாலையில் உள்ள ந.பூபதி நினைவு பெரியார் படிப்பகத்தில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் மாநில பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் , மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், திமுக மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அஞ்சுகம் பூபதி , மாநில கிராம பிரச்சார செயலாளர் அதிரடி அன்பழகன்.

மற்றும் மாநில ப.க துணை தலைவர் கோபு.பழனிவேல், மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன் , மாநில மாணவரணி அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன் , மாநகர தலைவர் பா.நரேந்திரன் , தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அ.ராமலிங்கம்.

மாவட்ட இளைஞரணி து.தலைவர் பா.விஜயக்குமார் , மாநகர இளைஞரணி து.தலைவர் அ.பெரியார் செல்வன் திக இளைஞரணி கதிரவன் ஆகியேர் கலந்துக் கொண்டு மானமிகு சுயமரியாதைகாரர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/