தஞ்சாவூர் நவ: 6- தீபாவளி பண்டிகையையொட்டி தஞ்சாவூர் மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மட்டும் சுமார் 300 டன் குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது இப்பணியில் மாநகராட்சி பணியாளர்கள் 550 பேர் பணியாற்றினர்.

தஞ்சாவூர் மாநகரில் உள்ள 51 வார்டுகளில் தினமும் 110 டன் முதல் 120 டன் குப்பை சேகரிக்க படுவது வழக்கம் இவை அனைத்தும் தஞ்சாவூர் ஜெபமாலை படத்தில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது இந்நிலையில் தஞ்சாவூரில் தீபாவளி பண்டிகையொட்டி காந்தி சாலை அண்ணாசாலை தெற்கு வீதி பழைய பேருந்து நிலையம் கலங்கும் அரண்மனை பகுதி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமாக தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.


சில நாட்களாக புத்தாடைகள் வாங்குவதற்காக ஏராளமானோர் இப்பகுதியில் திரண்டனர் இதனால் இப்பகுதியில் குப்பைகள் அதிகமாக தீபாவளிக்கு முந்தைய நாள் தீபாவளி சனிக்கிழமை முன்தினமும் வழக்கமான குப்பைகளுடன் பட்டாசு குப்பைகளும் சேர்ந்ததால் இரு நாட்களில் குப்பைகள் அதிகமானது இந்நிலையில் அரசு விடுமுறை நாளான நேற்றும் 4.30 மணிமுதல் மாநகராட்சி பணியாளர்கள் பணியாற்றினர்.

ஏறக்குறைய 550 பேர் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர் இந்த தூய்மைப் பணியில் 40 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன இதன் மூலம் ஏறத்தாழ 300 டன் குப்பை அகற்றப்பட்டுள்ளன ஒரே நாளில் இரு மடங்குக்கும் அதிகமான குப்பைகள் அகற்றப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

க.சசிகுமார் நிருபர்
https://thanjai.today/